யாழ்ப்பாணத்தில் உதயமாகவுள்ள ஜீவ ஊற்று அன்பின் கரம்

ஜீவ ஊற்று அன்பின் கரம் – யாழ்ப்பாணம் கிளை அலுவலகம்
எமது யாழ்ப்பாணம் கிளை அலுவலகத்தின் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.
தையல் பயிற்சிக்குத் தேவையான அனைத்து தையல் இயந்திரங்களும் பொருத்தப்பட்டு, பயிற்சி நிலையம் முழுமையாக தயாராகியுள்ளது.
கிளை அலுவலக திறப்பு விழா: 30.07.2026
தையல் பயிற்சி ஆரம்பம்: 03.08.2026
பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்தையும் சுயதொழில் வாய்ப்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். திறப்பு விழாவிலும் பயிற்சி ஆரம்ப நிகழ்விலும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.






