களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தையல், ஆரி, கேக் பயிற்சி ஆரம்பம்

ஜீவ ஊற்று அன்பின் கரம் களுவாஞ்சிக்குடி கிளை – மட்டக்களப்பு மூன்றாம் கட்டம்
SQM Foundation Canada நிதி அனுசரணையில் தையல், ஆரி, கேக் ஐசிங் பயிற்சிகள் ஆரம்பமாகின்றன.
இதற்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும், கற்றுக்கொள்ளும் ஆவலுடனும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட இந்தப் பயிற்சித் திட்டம், பல பெண்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்கும்.
SQM Foundation (Canada) வழங்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் பெண்களின் தன்னம்பிக்கைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட சேவை.









