மன்னாரில் சிறப்பாக நடைபெற்று வரும் தையல் பயிற்சி

ஜீவ ஊற்று அன்பின் கரம் – மன்னார் கிளை அலுவலகம்
எமது மன்னார் தையல் பயிற்சி நிலையம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திறமையான பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் அளவெடுத்தல், வெட்டுதல், தையல் மற்றும் ஆடை தயாரிப்பு போன்ற நடைமுறைப் பயிற்சிகளை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கற்று வருகின்றனர்.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் சுயதொழில் உருவாக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு தரமான தொழிற்பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தப் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற நிதி மற்றும் ஊக்கமளித்து ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.










