கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்று வரும் தையல் பயிற்சி

ஜீவ ஊற்று அன்பின் கரம் – கிளிநொச்சி மணியங்குளம் கிளை அலுவலகம்
கிளிநொச்சி – மணியங்குளம் பகுதியில், Mission Mail நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நடைபெற்று வரும் தையல் பயிற்சி மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.
இந்தப் பயிற்சியின் மூலம் பல பெண்கள் தன்னம்பிக்கையுடன் தொழில்திறன்களை கற்றுக்கொண்டு, சுயதொழில் நோக்கி முன்னேறி வருகின்றனர். அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதலுடன், தரமான நடைமுறைப் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து வரும் Mission Mail நிறுவனத்திற்கும், எங்களுடன் இணைந்து பயணிக்கும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்னும் பல குடும்பங்களின் வாழ்வில் நம்பிக்கையின் ஒளியை ஏற்றும் எங்கள் சேவை தொடர்ந்து பயணிக்கிறது.












