கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பிரதேச தையல் பயிற்சி நிறைவு

ஜீவ ஊற்று அன்பின் கரம் கிளிநொச்சி கிளை – மணியங்குளம் 5ஆம் கட்ட தையல் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜீவ ஊற்று அன்பின் கரம் – கிளிநொச்சி கிளை, மணியங்குளம் மூலம் நடத்தப்பட்ட 5ஆம் கட்ட தையல் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்தப் பயிற்சியின் மூலம் பல பெண்கள் தையல் தொழிலில் திறமைகளைப் பெற்று, தன்னம்பிக்கையுடன் சுயதொழில் நோக்கி முன்னேறுவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளனர்.
இந்த அரிய பயிற்சித் திட்டத்திற்கு தாராளமான நிதி அனுசரணையை வழங்கிய Mission Mail நிறுவனத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் உயரிய பங்களிப்பு பல பெண்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்கியுள்ளது.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அனைத்து மாணவிகளுக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் வளமுடன், வெற்றியுடன் அமைய இறைவனை வேண்டுகிறோம்.















