கிளிநொச்சி மாவட்ட தையல் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தையல் பயிற்சி திட்டம் வெற்றிகரமாக நிறைவு
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த தையல் பயிற்சி திட்டங்கள் வெற்றிகரமாக ஆரம்பித்து நிறைவடைந்து வருகின்றன.
அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் மணியங்குளம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தையல் பயிற்சி அணி, பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்து தற்போது வெளியேறியுள்ளது.
குறித்த பயிற்சிகளில் பங்கேற்ற பயிலுநர்களுக்கு தையல் துறையில் அடிப்படை மற்றும் நடைமுறை அறிவுகள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் தன்னிறைவு அடையும் வகையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்து, பயிலுநர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் பலர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளதாக அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களிலும் இதுபோன்ற தொழில் திறன் மேம்பாட்டு திட்டங்களை மேலும் பல பிரதேசங்களில் முன்னெடுக்க ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



























