முல்லைத்தீவில் ஆரி கைவேலை பயிற்சி நிறைவு செய்த மாணவிகளிற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் முயற்சியால் முல்லைத்தீவில் ஆரி பயிற்சி வெற்றிகரமாக நிறைவு
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தொடர்ச்சியான முயற்சியின் பயனாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரி (Aari) கைவேலை பயிற்சி திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.
குறித்த பயிற்சியில் 10 மாணவிகள் பங்கேற்று, ஆரி கைவேலை தொடர்பான அடிப்படை மற்றும் மேம்பட்ட திறன்களை கற்றுக்கொண்டதுடன், பயிற்சிகளை சிறப்பாக நிறைவு செய்து சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
இந்த பயிற்சி திட்டம் பெண்களை தன்னிறைவு அடையச் செய்வதுடன், அவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாக அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்து, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்து விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்காலத்திலும் இதுபோன்ற தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை மேலும் பல பிரதேசங்களில் முன்னெடுக்க ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














