மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி

மன்னார் பகுதியில் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜீவ ஊற்று தொடர்ந்து பல்வேறு சேவைகளை முன்னெடுத்து வருகிறது.
அன்பின் கரத்தினால் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆரி வேக் பயிற்சிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இத்தகைய பயிற்சிகள் மூலம் பயனாளிகள் தங்களின் திறன்களை மேம்படுத்தி, தன்னிறைவு பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வழிவகுக்கப்படுகின்றனர்.





































