முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள்

முல்லைத்தீவு தலைமை அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள்
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் முல்லைத்தீவு தலைமை அலுவலகத்தில், Mission Mail நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் மிகச் சிறப்பாக நிறைவடைந்தன.
பயிற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடனும் திறமையுடனும் கலந்து கொண்டு தங்களது கலைத்திறன்களை வெளிப்படுத்தினர். இப்பயிற்சிகள் அவர்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்கும் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் சிறந்த அடித்தளமாக அமையும்.
இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய Mission Mail நிறுவனத்திற்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும், அனைத்து மாணவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜீவ ஊற்று அன்பின் கரம்
முல்லைத்தீவு தலைமை அலுவலகம்
















