கிரிவலம் அறக்கட்டளையினரால் 50 பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பை வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் ஊடாக கிரிவலம் அறக்கட்டளையால் 50 பாடசாலை மாணவர்களிற்கு புத்தக பைகள் வழங்கி வைப்பு.
கிளிநொச்சி மணியங்குளத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கான மாவட்ட அலுவலகம், தையல் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வும் (15.07.2025) அன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந் நிகழ்வில் கிரிவலம் அறக்கட்டளை ஊடாக 50 பாடசாலை மாணவர்களிற்கு பாடசாலை உபகரணங்கள் (புத்தகபை) வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதனை கிரிவலம் அறக்கட்டளையின் பொருலாளர் கெ.ரி.பாரதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.























