வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால்மா வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக கடந்த (06.12.2019) அன்று மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் குழந்தைகளுக்குரிய பால் மா பைகளை கூட பெற்றுக் கொள்ள முடியாமல் இன்னல்களை அனுபவித்த இருபத்தைந்து (25) குடும்பங்களுக்கு எமது நிர்வாக பணியாளர்களால் பால் மா பைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்குரிய நிதி உதவியை நெதர்லாந்தில் இருந்து செய்துதவிய சகோதரிக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்.
இன்னமும் அதிகமாக எம் உறவுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் நீங்களும் எம்முடன் இணைந்து இவ் உன்னதமான பணியில் பயனிக்க முடியும் என அன்புடன் அழைக்கின்றோம்


















