மணல்காட்டு பகுதியில் 184 வது வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின்கரம் நிறுவனத்தின் வீட்டுத்திட்ட பணிகள்
19.02.2026 இன்று காலை மணல்காட்டு பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினருக்கு ஜீவ ஊற்று அன்பின்கரம் நிறுவனத்தினரால் அவுஸ்ரேலியாவில் (Australia) வசிக்கும் சிவகுமாரன் தாரணி குடும்பத்தினரின் அனுசரணையில் (அவர்களது 6வது வீடு) ஜுவ ஊற்று அன்பின் கரத்தின் 184 வது வீட்டிற்கு அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்றது.
இதற்கு ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வடமராட்சி அமைப்பாளர்கள், மணல்காட்டு பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அகஸ்ரின், மணல்காட்டு J/418 கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், வீட்டுத்திட்ட பயனாளிகள் மற்றும் ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






















