கிளிநொச்சி மாவட்டத்தில் 50 பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் ஊடாக அவுஸ்திரேலியா செயற்பாட்டாளரால் 50 பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கி வைப்பு.
கிளிநொச்சி மணியங்குளத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கான மாவட்ட அலுவலகம், தையல் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வும் (15.07.2025) அன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந் நிகழ்வில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் அவுஸ்திரேலியா செயற்பாட்டாளர் சிவா அண்ணன் அவர்களினால் பாடசாலை உபகரணங்கள் (புத்தகபை) வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதனை ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
















































