மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தையல் பயிற்சி

ஜீவஊற்று அன்பின்கரம் – மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கிளை அலுவலகம்
SQM_Foundation நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நடைபெற்ற இரண்டு மாத தையல் பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.
இன்றைய தினம் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவிகள் தன்னம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் காட்சிகள் இங்கே பதிவாகியுள்ளன.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் சுயதொழில் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் SQM Foundation நிறுவனத்திற்கும், அதன் ஸ்தாபகர் திரு. கமலநாதன் பாக்கியராசா அவர்களுக்கும் ஜீவஊற்று அன்பின் கரம் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
இறைவன் தங்களது சேவையையும் அர்ப்பணிப்பையும் மேலும் ஆசீர்வதித்து, இன்னும் பலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த கிருபை செய்வாராக.














