ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக அனைவருக்கும் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம்.

இன்றைய நாள் ஜீவ ஊற்று அன்பின் கரம் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவன்கேணி எனும் பிரதேசத்தில் பின் தங்கிய கிராமம் ஒன்றில் நீண்ட காலமாக சொந்த காணு வீடு எதுவுமே இல்லாமல் தவித்த குடும்பத்தினருக்கு இன்றைய நாள் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் ஊடாக நிரந்தர வீடு மற்றும் மலசலகூடம் மற்றும் மின்சாரம் அனைத்தும் பெற்றுகொடுத்து குறித்த வீட்டினை வழங்குகின்றோம்.
குறித்த குடும்பத்தினரை அறிமுகபடுத்தியவர் மக்கள் நாயகன் யூடியூப் சனல் சஜீப் க்கும் குறித்த வீட்டிற்கு நிதி உதவியினை வழங்கிய அவுஸ்திரேலியா தேசத்தில் வாழ்கின்ற சிவகுமாரன் தரணி குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
இதுபோன்று அநேக உறவுகள் எமது தேசத்தில் வீடு இன்றி வாழ்ந்து வருகின்றனர்.நீங்களும் அந்த குடும்பங்களோடு ஒரு பங்காளராக இணைய விரும்பினால் எம்மோடு நீங்கள் தொடர்பு கொள்ளலாம்




