• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

திருகோணமலை மாவட்டத்தில் 4 குடும்பங்களிற்கு வீடுகள் கையளிக்கப்பட்டமை

Jeevaootru
August 9, 2024
Trincomalee – திருகோணமலை, நிரந்தர வீடு கையளிப்பு

“சமூகங்களை கட்டியெழுப்புதல்” திட்டத்தின் கீழ் Pledge to Restore Foundation அமைப்பின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இணைப்பாக்கத்தில், சொந்த வீடுகள் இல்லாது வாழ்ந்து வந்த நான்கு குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 09.08.2024 அன்று நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகிய தென்னவன் மரபு அடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாது, சொந்த வீடுகள் இல்லாது வாழ்ந்து வந்த நான்கு குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகள் இன்று உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன.

திருகோணமலை நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறித்த கிராமத்தில் வசித்து வருகின்ற பொதுமக்கள் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்த பின்னராக போதுமான அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாமல் தினமும் புறக்கணிக்கப்படும் நிலையில் தமது வாழ்க்கையை நடத்திவந்த இந்நிலையில் அம் மக்களுக்கான உதவித்திட்டமாக இது அமைந்துள்ளது என்பது விசேட அம்சமாகும்.

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் ஊடாக Pledge to Restore Foundation இன் நிதி அனுசரணையில் இவ்வீடுகள் நிருமாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப் பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் குணநாதன், Pledge to Restore Foundation இன் அமைப்பின் ஸ்தாபகரும் தேசிய இயக்குனருமாகிய (அவுஸ்ரேலியா) திரு. உதயன் பத்மநாதன், ஜீவஊற்று அன்பின் கரங்கள் அமைப்பின் செயலாளர் திரு.ஜே.ரி. பிரவின், மற்றும் திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு.அத்தநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்தனர்.

மேலும் இதன் போது தென்னைவன் மரபு அடி கிராம உத்தியோகஸ்த்தர், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர், கிராம அபிவிருத்தி சங்கம் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஏனைய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், குறித்த கிராமத்தினை சேர்ந்த பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு பாடசாலை மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களும் சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவுப் பரிசுகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

மக்களின் நிலை அறிந்து தாமாகவே முன் வந்து அவர்களுக்குரிய வீடுகளை நிர்மாணித்து கொடுத்த Pledge to Restore அமைப்பினருக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் அமைப்பிற்கும் இதன் போது பயனாளிகள் தமது உளமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
வவுனியா மாவட்டத்தில் பத்து குடும்பங்களிற்கு இல்லங்கள் நிர்மாணிப்பு
Next Story
வவுனியா மாவட்டத்தில் நடைபெறும் வீட்டு வேலைப்பணிகள்

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,