முல்லைத்தீவு மாவட்ட மூங்கிலாறு பகுதியில் 59 ஆவது இல்லம் அமைத்து கொடுக்கப்பட்டமை

ஜீவஊற்று அன்பின் கரத்தினர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில்,
இன்றைய நாளிலும் (26.05.2022) அன்பின் இல்லம் மற்றும் மலசலகூடம் என்பன பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 59 ஆவது இல்லமும் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 39 வது இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மூங்கிலாறு பகுதியில் பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக மக்கள் நல் வாழ்வு மையத்தின் கனடா தேச உறுப்பினர்களான கணேஸ் அண்ணா மற்றும் தம்பிராசா குகன் அண்ணா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்தோடு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உறுப்பினர்களும் மக்கள் நல் வாழ்வு மைய உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவ் இல்லத்திற்கான நிதியினை அமரர் கனகசிங்கம் சத்தியமூர்த்தியின் நினைவாக Easy Shipping Ltd. UK வழங்கியிருந்தனர்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org








