திருகோணமலை மாவட்ட மூதூர் வீரமா நகர் கிராமத்தில் 62 ஆவது இல்லம் வழங்கப்பட்டது

ஜீவஊற்றுஅன்பின்கரம் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில்,
இன்றைய நாளிலும் (16.06.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது”ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 62 ஆவது இல்லம் ஆகும்.
இவ் இல்லமானது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் வீரமா நகர் எனும் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கு.வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதியை வழங்கிவைத்த
சீயோன் தேவ சபை
(லண்டன்.) மக்களிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org















