கிளிநொச்சி மாவட்ட மணியங்குளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் தையல் பயிற்சி

ஒரு மாத காலத்திலேயே தையல் பயிற்சியில் வெற்றி!
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளத்தில் அமைந்துள்ள ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இலவச தையல் பயிற்சியானது மாபெரும் வெற்றியளித்துள்ளது.
ஜீவ ஊற்றின் அன்பின் கரமானது இலங்கையில் உள்ள மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வருகிறது.
வாழ்வாதாரமாக பொருளோ பணமோ வழங்கினால் அதை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு அடுத்த கட்டம் என்ன செய்வது என்று அறியாமல் பலர் தவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் ஜீவ ஊற்று அன்பின் கரமானது அவர்களது வாழ்வாதாரமாக தொழில் பயிற்சியை இலவசமாக வழங்கி வருகிறது.
கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் தமது அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி வருகிறது.
குறித்த நிறுவனமானது கிளிநொச்சி மாவட்ட மணியங்குளத்தில் உள்ள தமது கிளை காரியாலயமான இலவச தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று ஒரு மாத கால பகுதியிலேயே பாடசாலை மாணவிகளுக்கான பாடசாலை சீருடைகளை வெட்டி தைப்பதற்கு தயாராகியுள்ளனர்.
தையல் பற்றிய எந்த அனுபவமும் இல்லாமல் வந்த குறித்த பயிற்சியாளர்கள் ஒரு மாத கால பகுதியிலேயே தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆரம்பித்தமை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கிளிநொச்சி மணியங்குளம் கிராமத்தில் இயங்கும் இலவச தையல் பயிற்சி நிலையத்திற்கு மிஷன் மெயில் (நெதர்லாந்து) நிறுவனத்தினர் நிதி பங்களிப்பினையும் தொடர் பங்களிப்பையும் ஆற்றி வருகிறார்கள்.















