மட்டக்களப்பு மாவட்டத்தில் 134 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டம், பெரியபோரைதீவு மண்ணில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் அன்பின் இல்லம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
வீடு இன்றி தவித்து வந்த ஒரு குடும்பத்திற்கு நிரந்தரமான பாதுகாப்பான இல்லம் ஒன்று கட்டி வழங்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரியது.
இல்லத்திற்கான முழு நிதி உதவியையும் SQM Foundation ஸ்தாபகர் கமலநாதன் பாக்கியராசா அண்ணா அவர்கள் வழங்கியிருந்தார்கள்.
இவ்வில்லமானது SQM Foundation இன் 29ஆவது இல்லம் மற்றும் ஜீவ ஊற்றின் 134ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏழை எளிய மக்களின் முகத்தில் சிரிப்பு மலரச் செய்ய எம்மோடு இணைந்து உங்கள் கரங்களையும் நீட்டுங்கள்.















