வடகிழக்கு பகுதிகளில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் அறிமுகம்

வடகிழக்கில் SQM Founder இன் தரமான சம்பவம். உதயமாகிறது செயற்கை கால் உற்பத்தி நிலையம்.
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள துளிர்க்கும் வாழ்வு நிலையம்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது கடந்த 9 ஆண்டுகளாக தனது உன்னதமான சேவையை மக்களுக்கு ஆற்றி வருகிறது.
இந் நிறுவனத்தின் வேலைத்திட்டங்களானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு வாழ்வாதாரம் வீட்டுத்திட்டம் மற்றும் மாணவச்செல்வங்களுக்கான கல்வி சார் உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் என பல உதவிகளை 10 ஆண்டுகாலமக செய்து வருகின்றது.
இதன் அடிப்படையில் தனது மகத்தான சேவையில் மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சேவையாக ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது புதிதாக துளிர்க்கும் வாழ்வு நிலையம் ஆரம்பமாகவுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு காலை இழந்த வடகிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் செயற்கை காலை திருத்துவதற்கும் அதை மேற்கொள்வதற்கும் பல இன்னல்களை சந்தித்து வரும் மாற்று திறனாளிகளுக்கான முதல்கட்ட நகர்வாக எமது ஜீவ ஊற்றின் அன்பின் கரம் தலைமை அலுவலகத்தின் உன்னதமான சேவையினை ஆரம்பிக்க திட்டம் வகுக்கப்பட்டு முதல் கட்டமாக அதற்குரிய கட்டடம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.
குறித்த கட்டடமானது 2025 ஆம் ஆண்டு வடகிழக்கில் காலை இழந்துள்ள மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்துகிறோம்.
புலம்பெயர் உறவுகளே எமது மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற சகோதர சகோதரிகளுக்கான ஒரு செயற்கை காலை பொருத்துவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப்படவுள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு கைகோர்க்கும் முகமாக புலம்பெயர் உறவுகள் கை கொடுக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணப்பொருட்கள் அநேக தேவைப்பாடாக உள்ளதனால் எம்மோடு நீங்கள் இணையும் பொழுது மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றோம்.
இதற்காக உதவி புரிந்த SQM Foundation Canada நிறுவனம் மற்றும் Misson mail
Netherland ஆகிய நிறுவனங்களுக்கும் எமது நன்றியை தெரிவிப்பதோடு மேலும் எம் நிறுவனத்தின் ஊடக புலம்பெயர் உறவுகள் இணைந்து வடக்கு கிழக்கில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.
www.jeevaootru.com
