மட்டகளப்பு மாவட்டம் சித்தாண்டி பகுதியில் SQM Foundations அமைப்பின் 24வது இல்லம் கையளிப்பு.

✒ ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது SQM அமைப்போடு கைகோர்த்து பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது.
🏡 விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
🏡அந்தவகையில் கடந்த 02.02.2025 அன்று SQM Foundation Canada இனது 24 ஆவது இல்லமும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 126 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
🏡இவ் இல்மானது மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டிப் பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
🏡 இதற்கான நிதி உதவியை SQM Foundation Canada இனது ஸ்தாபகர் கமலநாதன் பாக்கியராசா அண்ணா அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
🏡இவ் மகத்தான உதவியினை நல்கிய அண்ணனுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
🏡அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
JEEVAOOTRU trust
http://www.jeevaootru.ngo
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo













