யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரமானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 172 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டவுள்ளது.
இதற்கான நிதி உதவியை இத்தாலி மனிதநேய சங்கத்தின் 4வது இல்லமும் உறுப்பினர் s. கஜேந்திரன் நிதியுதவி இத்தாலி ஜொனோவா genova வழங்கியுள்ளனர். இவ் இல்லம் இவர்களின் முதலாவது இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவ ஊற்றின் அன்பின் கரத்தின் செயற்பாட்டாளர் லண்டன் வாவு அண்ணாவின் பிரான்ஸ் சோதிமலர் நமசிவாயம் மாமியின் நினைவாக நிதி உதவி வழங்கி இருக்கிறார்கள்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய உறவுகளிற்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஜீவ ஊற்றின் அன்பின் கரத்தின் 2 வது இல்லமும் லண்டன் வாவு அண்ணாவின் (சோதிமலர் நமசிவாயம் பிரான்ஸ் மாமியின் நினைவாக) என்பதை மகிழ்ச்சியுடன் அரியத்தருகிறோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
JEEVAOOTRU trust
https://www.jeevaootru.com
contact@jeevaootru.com










