3 ஏழை குடும்பங்களிற்கு மலசலகூடங்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது.
விசேடமாக நிரந்தர மலசலகூடம் அல்லலுறுகின்ற மக்களிற்கு மலசலகூடங்களை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கடந்த 20.05.2025 அன்று 3 மலசலகூடங்கள் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவை மன்முனை தென் எருவில் பற்று − களுவாஞ்சிகுடி பிரதேச செயலயகத்தின் வேண்டுகோளிற்கு இணங்க SQM Foundation நிதி அனுசரனையில் பிரதேசத்திற்கு உட்பட்ட எருவில், சூரியடி, குருக்கள்மடம் ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை SQM Foundation -Canada திரு. கமலநாதன் பாக்கியராசா ஸ்தாபகர் அவர்கள் நிதி உதவியை வழங்கியுள்ளார்கள்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
JEEVAOOTRU trust







