• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இலவச தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டமை

Jeevaootru
June 22, 2024
வாழ்வாதாரம், வாழ்வாதாரம் Mullaitivu- முல்லைதீவு

முல்லைத்தீவில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மற்றுமொர் மகத்தான பணி ஆரம்பமாகவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குட்பட்ட உப்புமாவெளி அளம்பில் பகுதியில் மூன்றாம் கட்ட இலவச தையல்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட உப்புமாவெளி அளம்பிலை தமது தலைமை காரியாலயமாக கொண்டுள்ள ஜீவ ஊற்று அன்பின் கரமானது பல மகத்தான பணிகளை இன மத மொழி பேதமின்றி இலங்கையில் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.

இதனடிப்படையில் மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி உதவியில் மூன்றாம் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலகத்தில் தையல் பயிற்சி நெறியானது ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சி நெறியானது தையற்கலையில் நிபுணத்துவமிக்கவர்களை கொண்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி நெறிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமே வழங்குகின்றனர்.இக் கற்கை நெறிக்கு ஜீவ ஊற்று அன்பின் கரத்தோடு கைகோர்த்து #மிஷன்மெயில் நெதர்லாந்து அனுசரனை வழங்குகின்றனர்.

இதனடிப்படையில் இரண்டாம் கட்ட தையல் பயிற்சிகளை இனிதே நிறைவு செய்த யுவதிகள் இன்று (22/06/2024)வெளியேறியதையடுத்து மூன்றாம் கட்ட தையல் பயிற்சி நெறியானது ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்தங்கள் இன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் பயிற்சியை நிறைவு செய்த யுவதிகள் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கு தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள பாரிய ஊன்று கோலாக இருந்த ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கு நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
வவுனியா மாவட்டத்தில் குழாய் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை
Next Story
மட்டக்களப்பு மாவட்டத்தில் 145 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,