கிளிநொச்சி மாவட்ட அம்பாள்குளம் கிராமத்தில் 102 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டமை

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் “ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்றைய நாளிலும் (29.07.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 102 ஆவது இல்லம் பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்மானது கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள்குளம் கிராமத்தில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையிலும் குடும்ப சுமையை தன் தோழில் சுமந்து செயற்படுகின்ற பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தில் இன்றைய தினத்திலும் திருமணபந்தத்தில் இணைந்து கொண்ட சுதீர் தீமோத்தி பியுளா ஆகியோர் தங்களின் திருமண நினைவாக வழங்கியுள்ளார்கள்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய சுதீர் தீமோத்தி & பியுளா ஆகியோருக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு திருமணவாழ்வு இனிதாக அமைய எம் மனப்பூர்வமான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
JEEVAOOTRU trust
http://www.jeevaootru.ngo
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo






















