மட்டக்களப்பு மாவட்டத்தில் 176 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை

ஜீவ ஊற்று அன்பின்கரம் பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கடந்த 27.07.2025 சிவநேசன்− மங்கையம்மா மகள் −Dr.சிவாஜினி மற்றும் மகன் அருன்தாவீது & Mrs. ஜெசிக்கா அருன்தாவீது குடும்பத்தினரது 06 ஆவது இல்லமும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 176 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைத்தல் நிகழ்வு நடைபெற்றது
இவ் இல்மானது மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி−நாவற்குடா பிரதேசத்திற்கு பகுதியில் பார்வையற்ற கணவன் மற்றும் மனைவி , 3 பிள்ளைகளுடன் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற வீடற்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்தினை அருன்தாவீது & ஜெசிக்கா ஆகியோரின் திருமண நினைவுப் பரிசாக வழங்குகிறார்கள் என்பது மகிழ்ச்சி.
இம் மகத்தான உதவியினை நல்கிய சிவநேசன் −மங்கையம்மா குடும்ப உறுப்பினர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறான அன்பின் இல்லங்களை நீங்கள் உறவுகளுக்கு நிர்மாணித்துக் கொடுக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளவும்.
குறிப்பாக தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
JEEVAOOTRU trust
https://www.jeevaootru.com
contact@jeevaootru.com
















