மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 176 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை

நாட்டு மக்களின் பொருளாதாரத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் தங்களுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் 16.06.2025 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 176 ஆவது இல்லமும் SQM Fundation ஸ்தாபகத் தலைவர் பாக்கியராசா கமல்நாதன் அவர்களுடைய 36 ஆவது இல்லத்திற்கானதுமான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் பல்வேறான இன்னலுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த கணவரால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவருக்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை பாக்கியராசா கமல்நாதன் SQM Fundation ஸ்தாபகத் தலைவர் வழங்கியுள்ளார். இதுவரை வழங்கப்பட்ட அனைத்து இல்லங்களினதுக்குமான நிதியினை அவர்களுடைய சொந்த நிதியிலிருந்தே வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
JEEVAOOTRU trust
Home









