முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

தடைகளை கடந்து பெண்கள் சாதிக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றப் பாதையில் ஜீவ ஊற்று அன்பின் கரம்
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் தற்போது கேக் ஐசிங் பயிற்சி மற்றும் அழகுக்கலை (Beauty Culture) பயிற்சி ஆகியவை வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பயிற்சிகளின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண்கள் புதிய திறன்களை கற்றுக்கொண்டு, தங்களுடைய வாழ்க்கையில் தற்சார்பு பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
பெண்கள் வீட்டிலிருந்தபடியே சிறு தொழில்களை ஆரம்பித்து தங்களின் குடும்ப வருமானத்தை அதிகரிக்கவும், தன்னம்பிக்கையுடன் வாழவும் இந்த பயிற்சிகள் பெரும் உதவியாக அமைந்துள்ளன.
இதுவரை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட தையல் பயிற்சி மற்றும் ஆரி வேலை (Aari Work) பயிற்சி ஆகியவற்றில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்று பயன் அடைந்துள்ளனர். இவர்களில் பலர் இன்று தங்கள் திறமைகளை தொழிலாக மாற்றி சுயதொழில் மேற்கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான பயிற்சி நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதற்கான முழுமையான நிதி மற்றும் ஆதரவு அனுசரனையை “மிஷன் மெயில்” நிறுவனம் வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் அர்ப்பணிப்பான ஆதரவு பல பெண்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் உருவாக்கி வருகிறது.
பெண்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை தன்னிறைவு கொண்ட சமூக உறுப்பினர்களாக உருவாக்குவது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் முக்கிய இலக்காகும். “பெண்கள் முன்னேறினால் – குடும்பமும், சமூகமும் முன்னேறும்” என்ற நம்பிக்கையுடன் இத்தகைய பயிற்சி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.




















