மட்டக்களப்பு கல்லடி பகுதியில் 153 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

ஜீவ ஊற்று அன்பின் கரம் – இன்னொரு அழகிய தொடுப்பு
மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி பகுதிக்கு உரிய பார்வைக் குறைபாடுடைய ஒரு குடும்பம்—கணவன், மனைவி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள்—நீண்ட காலமாக வீடற்ற நிலையில் மிகுந்த சிரமங்களுடன் வாழ்ந்து வந்தனர். இந்தக் குடும்பத்தின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வழங்கும் விதமாக, பலர் இணைந்து அருமையான உதவியை வழங்கியுள்ளனர்.
இந்த குடும்பத்திற்கான புதிய வீடு ( 06 ஆவது இல்லம்) கட்டுவதற்கான முழு நிதியுதவியை சிவநேசன் மங்கை குடும்பத்தினர் வழங்கி, அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினர்.
அதேபோல், மலசலகூடம் (04 ஆவது மலசலகூடம்) அமைப்பதற்கான நிதியுதவியை SQM பவுண்டேசன் நிறுவனர் கமலநாதன் பாக்கியநாதன் அவர்கள் வழங்கி, இந்த இல்லத்தின் அடிப்படை வசதிகளை மேலும் வலுப்படுத்தினார்.
வீட்டின் மின் இணைப்பு மற்றும் மின்சுற்று பணிகளுக்கான நிதியுதவியை ஜேர்மனியைச் சேர்ந்த A.K. அவர்கள் வழங்கி, குடும்பம் பாதுகாப்பான முறையில் புதிய வாழ்க்கையை தொடங்க உதவினார்.
இந்த மொத்த முயற்சியையும் ஒருங்கிணைத்து, அன்பின் நிறைந்த கைகளால் செயல்படுத்தியது இவ் இல்லமானது “ஜீவ ஊற்று அன்பின் கரம்” தொண்டு நிறுவனத்தினுடைய 153 ஆவது இல்லம் ஆகும். சமுதாயத்தின் புறக்கணிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கான இந்த அர்ப்பணிப்பு, மனிதநேயத்தின் அழகிய சான்றாக மாறியுள்ளது.
இந்த நற்செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

















