முல்லைத்தீவு மாவட்டத்தில் கள்ளப்பாடு பகுதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை
தொடர் நிவாரணப் பணி ஜீவ ஊற்று அன்பின் கரம்
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (22.12.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தில் Jesus Royal Priesthood ஊழியங்களை நடாத்தி வருகின்ற Bro. அன்பழகன் வழங்கியிருந்தார்.
இவ் உதவியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கள்ளப்பாடு பகுதியில் தொடர் மழை காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்ப உறவுகளுக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Jesus Royal Priesthood ஊழியங்களின் BRO-அன்பழகன் அவர்களுக்கு உதவியினை பெற்ற மக்கள் சார்பாக எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எம் தேசத்தில் இன்னல்களுக்குள்ளான அநேகமானோர் வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி