மன்னார் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட 50 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
இன்றைய நாளிலும்(14.05.2022) வட இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் அடம்பன், சொர்ணபுரி, வங்காலை, பாலைக்குழி. பகுதியில் வாழ்கின்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட 50 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் தலா ரூபாய் 2800 வீதம் வழங்கப்பட்டுள்ளது.
“ஜீவ ஊற்று அன்பின் கரம்”அமைப்பின் நியூசிலாந்து தேசத்தின் செயற்பாட்டாளர் ரவி அண்ணாவின் ஒழுங்குபடுத்தலில் கே.சிவா அண்ணன், வி.சிவா அண்ணன்,ஆனந்த் அண்ணன் மற்றும் ராஜா அண்ணன் ஆகியோர் தேவையான நிதியை வழங்கியிருந்தனர்.
அத்தோடுகூட யுத்தத்தின் போது மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்டு கவனிப்பாரற்று அநேகர் எம் தேசத்தில் காணப்படுகின்றனர்.
இவர்களிற்கு உதவ விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
Email_info@jeevaootru.org
Web_jeevaootru.org