பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கில் 24 சைக்கிள்கள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள இருபத்துநான்கு பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.
03/06/2020 ஆகிய இன்றைய நாளில்
இரட்னசிங்கம் ஜெயசோதி அவர்களின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கான 6 துவிச்சக்கர வண்டிகளும் கிளிநொச்சி முருகண்டி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு 6 துவிச்சக்கர வண்டியும்,வட்டக்கச்சி ராமநாதபுரம் பகுதியில் 12 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும், வழங்கிவைக்கப்பட்டது.
தாயார் தனது பிறந்த தினத்தை இந்த சிறார்களுடன் மிக சிறப்பாக கொண்டாடியதை ஜீவ ஊற்று அன்பின் கரம் ஐரோப்பிய மற்றும் இலங்கை குழுவினர் மிகுந்த நன்றியறிதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் தாயாரையும் உதவிகள் வழங்கப்பட்ட சகோதர சகோதரிகளையும் ஆண்டவர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பாராக..
மேலும் இது போன்று நீங்களும் உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்