கொரோனா பாதிப்பு மத்தியில் வவுனியா கிளிநொச்சி மன்னார் பகுதியில் நிவாரணம் வழங்கப்பட்டது
Coronavirus தாக்கத்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் அன்றாடம் கூலி வேலை செய்து தங்களுடைய வாழ்வை கொண்டு நடத்தும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக வவுனியாவில் சண்முகபுரம் நேரியகுளம் ஒட்ராக்குளம் செட்டிகுளம் முகத்தான் குளம் முதலியார்குளம் பகுதியை சேர்ந்த 34 குடும்பங்களிற்கும், மன்னார் முழங்காவில் பகுதியிலும், கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியிலும் இந் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை எமது நிறுவன சுவிட்சர்லாந்து கிளை மக்கள் மற்றும் Australia Imagine Compassion International Ltd நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
இவ்வாறு இன்னமும் ஏராளமான எமது உறவுகள் பல இன்னல்களை எதிர் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். விரும்பினால் நீங்களும் இவ் உன்னத பணியில் இணைந்து கொள்ள முடியும்.