ஐந்தாவது வெள்ள நிவாரணம் வவுனியாவில் வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (08.12.2019) வவுனியா இலுப்பைக்குளம் பகுதியில் மழை நீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 52 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பணிகள் வழங்கப்பட்டன.
இதற்குரிய நிதி உதவியானது ஜீவ ஊற்று அன்பின் கரம் கிளைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சிறிய பணத் தொகைகளை கொண்டு வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட பகுதி மக்கள் வாழ்ந்த வீடுகளில் நீர் மூழ்கி இருந்தது. இதனால் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்க வைக்கப்பட்டனர்.
இவ் உதவிகளை எமது வவுனியா மாவட்ட ஜீவ ஊற்று அன்பின் கரம் இணைப்பாளர் கொண்டு சேர்த்தார்.
இன்னமும் அதிகமாக எம் உறவுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் நீங்களும் எம்முடன் இணைந்து இவ் உன்னதமான பணியில் பயனிக்க முடியும் என அன்புடன் அழைக்கின்றோம்