மன்னார் மாவட்டத்தில் இரு இடங்களில் கொப்பிகள் வழங்கப்பட்டன
கல்விக்கு கரம் கொடுக்கும் உன்னத பணியின் கீழ்
ஜீவஊற்றுஅன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக மன்னார் மாவட்டத்தில் வெள்ளாங்குளத்தை சேர்ந்த 60 மாணவர்களுக்கும், நாச்சிக்குடா சுவிஷேச கூடார சபையை சேர்ந்த சிறார்களுக்கும் கொப்பிகள் வழங்கப்பட்டது.
அத்தோடு மாணவர்களுடைய ஆற்றல் திறனை விருத்தி செய்வதற்கான பயனுள்ள கருத்துக்களும் நிகழ்வில் கலந்து கொண்ட எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் பணியாளர்களினால் வழங்கப்பட்டது .
இவ் உதவியானது நெதர்லாந்து தேசத்தில் உள்ள சுவிஷேச தரிசன சபையினர் வழங்கினர். இவர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்.
ஏற்கனவே யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை பகுதியை சேர்ந்த ஓர் சில பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் இது போன்ற பணிகள் எம் தேசம் எங்கும் இடம்பெற இருப்பதால் எம்முடன் இணைந்திருங்கள்.