மட்டக்களப்பு மாவட்டத்தில் மைலம்பாவெளி கிராமத்தில் 84 ஆவது இல்லம் வழங்கப்பட்டமை
புத்தாண்டிலும் புத்தாடை அணிந்து புதுப்பொலிவு காட்டுவதைக்காட்டிலும் பொலிவற்ற மக்களின் வாழ்வைபுதுப்பொலிவாக்க வேண்டும் எனும் நோக்கை கருத்தில் கொண்டு இன்றைய நாளிலும் நேயமிக்க பணிதொடர்ந்தது. நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் “ஜீவ ஊற்றுஅன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது. விசேடமாகநிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமைகுறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்றைய நாளிலும் (01.01.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 84 ஆவது இல்லமும் அதேசமயம் SQM JANITORIAL SERVICES INC AND SQM FOUNDATION CANADA இனது 13 ஆவது இல்லமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லமானது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மைலம்பாவெளி எனும் கிராமத்தில்பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வந்த குடும்பத்தினருக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை வழங்கியிருந்தவர் கமலநாதன் பாக்கியராஜா அண்ணா ( SQM Founder ) அவர்கள் ஆவார். கமலநாதன் பாக்கியராஜா அண்ணா அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றஉதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம். …