வவுனியா மாவட்டத்தில் 15 நிரந்தர வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது
வணக்கம்
வவுனியா மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வீட்டு திட்டங்களை நிர்வகித்து அதனை நிவர்த்தி செய்ய முடியாமல் அல்லல்படுகின்றவர்களுக்கு, ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனம் மற்றும் SQM Foundation இணைந்து அரசு வீட்டு திட்டத்திற்கு அமைவாக மேலதிக சகல நிர்வகிப்புக்களையும் மேற்கொண்டு வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 15 நிரந்தர வீடுகளை பயனாளிகளுக்கு கார்த்திகையின் மாதத்தில் கையளிக்க இருக்கிறது.
வறுமையின் பிடியில் அல்லலுறுகின்ற மக்களது பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இனி வரும் மழை காலங்களிலாவது அவர்கள் தமது சொந்த வீட்டில் நிம்மதியாக தூங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த SQM Foundation மற்றும் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்திற்கு பயனாளிகள் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
தகவல்
ஜீவ ஊற்று அன்பின் கரங்கள்
நன்றி.