மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம்.
அந்த வகையில் கடந்த 01.09.2024 மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி பிரதேசத்திற்குட்பட்ட தேவாபுரம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான நவநாதன் நவநீதன் அவர்கள் தனது அமரத்துவமடைந்த சகோதரன் நவநாதன் ஜசோதன் (பங்கயன்) அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கியுள்ளார்.
இவருக்கு நன்மையைப் பெற்ற குடும்பம் சார்பில் எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.