வவுனியா மாவட்டத்தில் பத்து குடும்பங்களிற்கு இல்லங்கள் நிர்மாணிப்பு
அரசினால் வழங்கப்பட்ட நிரந்தர இல்லங்களை நிர்மாணிப்பதற்கு முடியாமல் அல்லலுற்ற மக்களின் நிரந்தர இல்லத்திற்கான கனவினை நனவாக்கிக் கொடுக்கின்றது ஜீவ ஊற்று அன்பின் கரம்.
அந்தவகையில் கடந்த காலங்களில் வவுனியா மாவட்டத்தில் நிரந்தர வீடின்றி தவித்த எம் உறவுகளுக்கு இல்லங்களை நிர்மாணிப்பதற்காக அரசானது குறிப்பிட்டதொகைப் பணம் ஒவ்வொரு குடும்பத்திற்குமாக ஒதுக்கியிருந்தது.
ஒதுக்கப்பட்ட நிதிக்குள் இல்லங்களை நிர்மாணிக்க முடியாமல் தத்தளித்த பத்து குடும்ப உறவுகளின் இல்லங்களை பிரதேச செயலகத்தின் முன்னிலைப்படுத்தலின் கீழ் அவ் இல்லங்களை நிர்மாணித்து வழங்குவதற்கு ஜீவ ஊற்று அன்பின் கரத்தோடு SQM Foundation இணைந்து அம் மக்களின் நிரந்தர வீட்டின் கனவினை நிறைவேற்றி கொடுப்பதற்குரிய பணிகளை ஆரம்பித்துள்ளோம் எனும் மகிழ்வின் செய்தியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி