கிளிநொச்சி மாவட்டத்தில் 67 வது குழாய்க்கிணறு அடித்து கொடுக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது இன்றும் எமது தேடலின் தெரிவில் அல்லலுறும் குடும்பத்திற்க்கு 67 வது குழாய்க்கிணறு ஒன்று அடித்து கொடுக்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது பல்வேறு பணிகளை ஆற்றுகின்ற போதிலும் எமது உறவுகளை வாழ வைக்கின்ற உன்னதமான பணியை இன்றும் (03.04.2024)ஆற்றியுள்ளது .
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் சிவபுரத்தில் உள்ள குடும்பம் ஒன்று அடிப்படை வசதியான தண்ணீர் வசதியை இழந்து மிகுந்த அல்லுற்று வாழ்ந்து வந்தது .
அவர்களுடைய பலவருட ஏக்கத்திற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இன்று ஒரு குழாய்கிணறு ஒன்றினை அடித்து கொடுத்துள்ளது.
இக்குழாய் கிணறினை அடித்துக் கொடுப்பதற்க்கான நிதி உதவியினை லண்டன் தேசத்தில் வசித்துவருகின்ற பாபு அண்ணா (Baba Shannon Corner service centre, new morlden surrey) அவர்கள் வழங்கியுள்ளார் .
இப்படியான பணிகளை தொடர்ந்து செய்ய நமது உறவுகளை வாழவைக்க புலம்பேர் தேசத்து உறவுகளை அழைத்து நிற்க்கிறோம்.
ஜீவ ஊற்று அன்பின் கரம்
நன்றி