முல்லைத்தீவு மாவட்ட வல்லிபுனம் பகுதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை
தொடர் நிவாரணப் பணி ஜீவ ஊற்று அன்பின் கரம்
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (25.12.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை கனடா சிஜோசியா தைசீலி அம்மா மற்றும் மகன் டெமில் (லண்டன்) ஆகியோர் வழங்கியிருந்தார்.
இவ் உதவியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் வல்லிபுனம் பகுதியில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாற்று வலுவுடைய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எம் தேசத்தில் இன்னல்களுக்குள்ளான அநேகமானோர் வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி