முல்லைத்தீவு மாவட்ட செல்வபுரம் பகுதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (20.12.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பணியாளர்கள் வழங்கியிருந்தனர்.
இவ் உதவியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் செல்வபுரம் பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட குடும்ப உறவுகளுக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இடர்காலத்திலும் ஓயாது செயற்படுகின்ற எம் பணியாளர்களுக்கு உதவியினை பெற்ற மக்கள் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் விதமாக எம் தேசத்தில் இன்னல்களுக்குள்ளான அநேகமானோர் வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.