வவுனியா பொன்னவரசம் குளம் பகுதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கியமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (29.11.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை பிரான்ஸ் தேசத்தில் வாழ்கின்றதான சகோதரி ஸ்ரெலா அவர்கள் தன் கணவவனின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கியிருந்தார்.
இவ் உதவியானது வவுனியா மாவட்டத்தில் பொன்னவரசம் குளம் பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட குடும்ப உறவுகளுக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_