திருமலை மூதூர் பிரதேசத்தில் 104 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டமை
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் “ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்றைய நாளிலும் (09.08.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 104 ஆவது இல்லமும் அதேவேளை மங்கையம்மாவின் 4 ஆவது இல்லமும் பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது திருமலை மூதூர் பிரதேசத்தில் கடற்கரைச்சேனை கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் நல் நிகழ்வில் மனிதநேயகாப்பகம் எனும் அமைப்பினை ஸ்தாபித்து பல்வேறு பணிகளையாற்றி வருகின்ற சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான திரு திருமதி கருணாமூர்த்தி ஐயா மஞ்சுளா அம்மையார் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதற்கான நிதி உதவியை சுவிட்சர்லாந்து தேசத்தில் வாழ்கின்ற சிவநேசன் மங்கையம்மாவின் பிள்ளைகள் DR.சிவாஜினி மற்றும் அருண்தாவீது ஆகியோர் வழங்கியுள்ளார்கள்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய உறவுகளுக்கு எம் மனப்பூர்வமான வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
JEEVAOOTRU trust
http://www.jeevaootru.ngo
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo