கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்பம் ஒன்றிற்கு கோழிகூடு நிர்மாணிக்கப்பட்டு கோழிகள் வழங்கப்பட்டமை
“ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (24.06.2023) வாழ்வாதார உதவி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அல்லலுறுகின்ற குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கோழிக்கூடு நிர்மாணித்து கோழிகள் மற்றும் தேவையான தீவனங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ் உன்னதமிக்க பணிக்கான நிதி உதவியை கனடா தேசத்தில் வன்கூவர் பகுதியில் வாழ்கின்றதான சகோதரி டான்ஷி
வழங்கியிருந்தார்கள்.
இந்த வாழ்வாதார உதவியானது கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் இடர்படுகின்றதும் அதே நேரம் கணவன் மற்றும் மனைவி இருவரும் வாய்பேசமுடியாதவர்களாயும் உள்ளதான குடும்பத்திற்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
விசேடமாக சகோதரி டான்ஷி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
God Bless You