முல்லைத்தீவில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலக திறப்புவிழா உப்புமாவளி அளம்பில் முல்லைத்தீவில் 25-02-23 அன்று வெகுவிமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் காரணமானது மக்களோடு மக்களாக மக்களுக்காகவே கடந்த எட்டு வருடங்களாக பல சமூக சேவைகளை நாடளாவிய ரீதியில் செய்து வருகிறது.
இலங்கை முழுவதும் கல்வி வாழ்வாதாரம், நலிவுற்றோரின் நலம் பேணல் மற்றும் சமூக நலன் கருதி மக்களோடு மக்களாக மக்களுக்காகவே ஜீவ ஊற்று அன்பின் கரம் செயற்படுகிறது.
நிறுவனத்துக்கான
கட்டிட அனுசரணை வழங்கிய மிஷன் மெயில் நிறுவனத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.