கிளிநொச்சி மாவட்ட கிளிநகர் கிராமத்தில் குழாய்க்கிணறு நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டமை
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் PROPERTY MAX REALTY INC நிறுவனமானது தன்னுடைய உன்னதமான பணிகளை இடைவிடாமல் சிறப்பாக செய்து வருகின்றது.
அந்தவகையில் இன்றைய நாளிலும் (19.02.2023) கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநகர் எனும் கிராமத்தில் மாற்றுத்திறனாளியான பெண்ணை தலைமையாகக் கொண்ட குடும்பத்திற்கு குழாய்க்கிணறு நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியினை கனடா தேசத்தில் செயற்படுகின்றதான Property Max Realty Inc. நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய நிறுவனத்தினருக்கு ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பில் எம் மனப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
JEEVAOOTRU trust
Email_info@jeevaootru.org
Web_jeevaootru.org