கிளிநொச்சி மாவட்டத்தில் போசாக்கு உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது
கிளி/கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று 41 குடும்பங்களுக்கு (ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளை உடைய தாய்மார்களுக்கு) போசாக்கு உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் நிர்வாக_உறுப்பினர்கள் வழங்கியிருந்தனர்.
இதை சிறப்பாக ஒழுங்கமைத்து தந்த கண்டாவளை
சுகாதார வைத்திய அதிகாரி Dr பிரியந்தி அவர்களுக்கும்
இதற்கு நிதி உதவியை வழங்கிய லண்டன்_கிளை றூபா_அம்மா அவர்களுக்கும் எமது நிறுவனம் சார்பாகவும் பயனாளிகள் சார்பாகவும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.