திருகோணமலை மாவட்டத்தில் 51 ஆவது இல்லம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது
இன்றைய நாளிலும் 23.03.2022 “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் 51 ஆவது இல்லமும் அதே வேளை விசுவாச வாழ்வு திருச்சபையின் 01 ஆவது இல்லமுமான அன்பின்
இல்லமானது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பாட்டாளி புரம் பகுதியில் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
பல்வேறு இன்னல்களுடன் வாழ்கின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியினை நெதர்லாந்து தேசத்தில் செயற்படுகின்ற விசுவாச வாழ்வு திருச்சபையின் 25 ஆவது வருட(25th anniversary) நினைவை முன்னிட்டு திருச்சபையின் தலைமைப் போதகர் Pas.K. பாஸ்கரன் மற்றும் சபை மக்கள் இணைந்து வழங்கியுள்ளனர். அத்தோடு இந்த சிறப்பான நாளில் இவ் இல்லத்திலேயே 30 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டது. யாவருக்கும் எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
{ The Faith life church
Main church/ Oosterhout,
Branch Church/ Eindhoven, Breda International/ Antwerpen/Belgium/ Srilanka.}
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
Email- info@jeevaootru.org
Web – jeevaootru.org